கதைப் போக்குப்படி காளிமா தேவி விக்ரமாதித்தனையும் பட்டியையும் மீண்டும் தேசத்திற்கு அழைத்து நாட்டு நிலவரத்தைப் பார்த்து வாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள். அவ்வப்போது அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொள்கிறாள்.
வேதாளமே இங்கே கதையை நகர்த்திச் செல்கிறது ஒரு விமர்சகனாக. விக்ரமாதித்தனும், பட்டியும், நானும் இங்கே பார்வையாளர்கள்தான்.
மகாகாளியின் கடைக்கண் அருளால் எல்லா துயரங்களுக்கும் ஒரு விடிவு காலம் பிறக்கிறது. கடவுள் நினைத்தால்தான் தேசத்தைத் திருத்தமுடியும் என்பது தெரியவருகிறது.
இங்குள்ளவர்கள் கடவுளையே விரட்டினாலும் கூட கடவுள் தமக்குத் துணையாக நிற்பார் என்று மக்கள் நினைக்கிறார்கள். அப்படியான மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறது வேதாளம்.
Sale!
| Weight | 0.350 g |
|---|---|
| Dimensions | 14 × 1.2 × 21 cm |
| Author |








