தாம் எழுதுவதையும் பேசுவதையும் அப்படியே உண்மை என்று மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். அதனால் அவர்கள் சொற்களுக்கு ஒப்பனை தீட்டுகிறார்கள். தாம் திணிக்க விரும்பும் பொய்மைக் கருத்துக்களுக்கு உண்மை முலாம் பூசுகிறார்கள். நிஜத்தை நிழலாகவும் நிழலை நிஜமாகவும் காட்டுவதில் வல்லவர்கள். அறியாமை என்ற இருளை உருவாக்கி கயிற்றைப் பாம்பு என்பார்கள். கண்களைக் கட்டிவிட்டுப் பாம்பை வெறும் கயிறு என்பார்கள். இந்த வகையைச் சேர்ந்ததுதான் திராவிட மாயை என்று வெகு நயமாக, ஆணித்தரமாக எடுத்துக் காட்டுகிறார் பிரபல பத்திரிகையாளர் திரு. சுப்பு அவர்கள்.
- Sorry, this product cannot be purchased.