திரைப்படப் பாடல்களின் மூலம் தனக்கொரு அடையாளத்தைத் தேடிக் கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், தமிழை ஆற்றுப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு தினமணி நாளிதழில் தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார். அவற்றுள் ஒன்று ‘தமிழை ஆண்டாள்’ என்னும் ‘ஆய்வுக்’ கட்டுரை. 2018-ஆம் ஆண்டு ஜனவரி 7- ஆம் தேதி அக்கட்டுரையை அவர் வாசிக்க, அதற்கு மறுநாள் தினமணி பத்திரிகையில் அது வெளியிடப்பட்டது. ஆண்டாள் தமிழை ஆண்ட பாங்கினைக் கூறுவதாக இந்தக் கட்டுரைக்கு அவர் தலைப்பிட்டிருந்தாலும், ஆண்டாளின் குலம், கோத்திரம் முதலியவற்றை ஆராய்ந்து அவள் ஒரு தேவதாசி என்ற முடிவுக்கு வந்து தமிழை ஆற்றுப்படுத்தினார் வைரமுத்து!