இது பொழுதுபோக்குப் புத்தகம் அல்ல, நம் ஆட்சியாளர் களைப் புரட்டிப்போடும் புத்தகம். இவர்களையா தேர்ந்தெடுத் திருக்கிறோம் என்று நம்மை வெட்கப்படவைக்கும் புத்தகம். நாடு சுதந்திரம் பெற்று 66 வருடங்களாகியும் மக்கள் வளரவில்லை; ஆட்சியாளர்கள் மட்டும் வளர்ந்திருக்கிறார்கள் என்று இவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த அவல நிலையை மாற்றுவது மக்கள் கைகளில் இருக்கிறது. மக்கள் மனம் வைத்தால் தொகுதிகளிகும் தோறும் தக்கவர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அதற்குச் சற்றுக் கால அவகாசம் தேவைப்படும் போலிருக்கிறது.