பிரிட்டிஷ் ஆட்சியின்போது இந்துஸ்தானியர்கள் எப்படி செயற்கைப் பஞ்சங்களின் மூலம் படுகொலை செய்யப்பட்டனர்; ஜனநாயகத்தை அறிமுகப்படுத்தியதாகச் சொல்லிக்கொண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எவ்வளவு சர்வாதிகாரத்துடன் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டனர்; தேசம் முழுவதும் ரயில் பாதைகளை அமைத்ததன் உண்மையான காரணம் என்ன.. அந்த ரயில்வே நிர்வாகத்தில் எந்த அளவுக்கு நிற வெறியுடன் நடந்துகொண்டிருக்கிறார்கள்; இந்துஸ்தானின் சமூக, பொருளாதார, அரசியல், ஆன்மிக நிறுவனங்களை எப்படியெல்லாம் சீரழித்தனர் என்பதுபோன்ற விவரங்களை திரு பவன் கே வர்மா, திரு சசி தரூர், திரு ராய் மாக்ஸம், திரு ராஜசேகர் பாசு போன்றவர்கள் மிக விரிவாக அதே பிரிட்டிஷ் ஆவணங்களைக் கொண்டே எழுதியிருக்கிறார்கள்.
இந்தப் புத்தகத்தின் முதல் பாதியில் மேலே சொல்லப்பட்டவர்களின் நூல்களில் இருந்து மேற்கோள்கள் வாயிலாக இந்துஸ்தானின் கடந்த காலப் பெருமைகளும் அவை சீரழிக்கப்பட்டவிதமும் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பாதியில் சுதந்தரம் பெற்றதற்குப் பிந்தைய காலகட்டத்தில் கல்வி, மருத்துவம், சமூக நடைமுறைகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் போன்றவற்றில் நாம் செய்துவருபவை என்னென்ன… செய்திருக்கவேண்டியவை என்னென்ன…என்பவை விவரிக்கப்பட்டுள்ளன. இனி வருங்காலங்களில் நம் சிந்தனை எப்படி மாறவேண்டும்? பிரிட்டிஷ் வருகைக்கு முந்தைய காலகட்டத்தில் எட்டிய உயரிய நிலையை எப்படி நாம்
மீட்டெடுக்கமுடியும் என்பவற்றின் அடிப்படையில் இந்த இரண்டாம் பகுதி எழுதப்பட்டுள்ளது.
பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டு என்று காலகட்டத்தை இரு பெரும் பிரிவாகப் பிரித்திருப்பதைப்போல் குலத் தொழில் காலம், குலத் தொழில் மருவிய காலம் என்றும் பகுக்கலாம்.
உலகம் முழுவதுமே குலத் தொழில் சார்ந்த வாழ்க்கை முறையே நிலவிய காலகட்டத்தில் பாரதத்திலும் அதுவே நிலவியது. அதோடு, அந்தக் குலத் தொழில் மரபில் உலகின் அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருந்தது. இதைத்தான் இந்தப் புத்தகத்தின் முதல் பாதியில் இடம்பெற்றுள்ள பிரிட்டிஷ் ஆவணங்கள் அழுத்தமாக, ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டுகின்றன.
Author |
---|