‘நான்மணிக்கடிகை’ பதினெண் நூல்களில் ஒன்று. கடிகை என்றால் துண்டு. மணி என்றால் ரத்தினம். பாடலுக்கு நான்கு என்று ரத்தினத் துண்டுகளாக 400 அறிவுரைகள் இருக்கின்றன. எதை எப்படிச் சொல்வது என்று தீர்மானம் செய்துகொண்டு எழுதியிருக்கிறார் விளம்பி நாகனார் என்ற புலவர்.